பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊட்டசத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் : தமிழகத்துக்கு ரூ. 259 கோடி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 08 DEC 2021 3:40PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

ஊட்டசத்து குறைபாட்டை போக்க ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் கீழ், அங்கன்வாடி சேவைகள், பதின்வயது பெண்களுக்கான திட்டங்கள்,   பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.

அங்கன்வாடி சேவைகளை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பெறுகின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் துணை ஊட்டசத்து பொருட்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் ரேஷன் பொருட்களாக வழங்கப்படுகின்றன. இவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதின் வயது பெண்கள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தபோஷான்என்ற ஊட்டச்சத்து திட்டம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

போஷான்திட்டத்துக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் நிதியாண்டு வரை மொத்தம் ரூ. 5,312 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு   ரூ. 259 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை கீழ்கண்ட இணைப்பில் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779256

*****


(रिलीज़ आईडी: 1779381) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi