சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் பயனாளிகள்
प्रविष्टि तिथि:
07 DEC 2021 3:50PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக இன்று தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
2011ம் ஆண்டு சமூக பொருளாதார கணக்கெடுப்பின் படி ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட பயனாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை தோராயமாக 10.73 கோடி (50 கோடி தனிநபர்கள்). இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77,70,928 குடும்பங்களும், புதுச்சேரியில் 1,03,434 குடும்பங்களும் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ. 359.81 கோடியும், புதுச்சேரிக்கு ரூ. 1.23 கோடியும் மத்திய நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதர மாநிலங்களின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778841
**************
(रिलीज़ आईडी: 1779048)
आगंतुक पटल : 261