மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சுதேசி நுண்செயலி சவால் இந்தியாவின் ட்ரோன் தொழில்நுட்பத்தில் புதுமைகளைக் கொண்டு வருகிறது
Posted On:
07 DEC 2021 12:53PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கு திட்டத்தை பின்பற்றி, 'சுதேசி நுண்செயலி சவால் - தற்சார்பு இந்தியவுக்கான புதுமையான தீர்வுகள்' போட்டியின் வெற்றியாளர்களை கடந்த வார விடுதலையின் டிஜிட்டல் கொண்டாட்டத்தின் போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அஜய் சாவ்னி பாராட்டினார்.
ட்ரோன்களுக்கான நம்பகமான ஒருங்கிணைந்த ஏவியோனிக்ஸ் அமைப்பு, ரத்த அணுக்களை எண்ணுவதற்கான வீட்டுத் தீர்வு மற்றும் எஃப் எம் ஆர்டிஎஸ் பயன்பாடுகள் ஆகியவை இந்த ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சவாலை வெல்வதற்காக இந்திய ஸ்டார்ட்-அப்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட மிகவும் புதுமையான தொழில்நுட்பங்களில் சில ஆகும்.
தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்பு சூழலியலை நாட்டில் தூண்டுவதற்கு இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 18, 2020 அன்று இந்த சவால் தொடங்கியது.
பரிசு வென்றவர்களை பாராட்டிய திரு அஜய் சாவ்னி கூறியதாவது: “நுண்செயலிகளை வடிவமைத்தவர்களுக்கு தாங்கள் வடிவமைத்துள்ளவற்றின் சக்தி உண்மையில் தெரியாது. விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நம்முடைய சொந்த நுண்செயலிகளை வைத்திருப்பது மற்றும் அவற்றை எங்கு பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்பது அற்புதமானது,” என்றார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778754
------
(Release ID: 1779037)
Visitor Counter : 258