சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
2014ம் ஆண்டு முதல் 132 அரசு மருத்துவக் கல்லூரிகள், 77 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல்
Posted On:
07 DEC 2021 3:46PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக இன்று தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தபடி, கடந்த 2014ம் ஆண்டு முதல் 132 அரசு மருத்துவக் கல்லூரிகள், 77 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவ படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கு 51, 348 இருந்த இடங்கள் தற்போது 88,120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் 78 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டுக்கு முன்பு, 31,185-ஆக இருந்த இடங்கள் தற்போது 55,595 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் அரசுத் துறையில் 21 மருத்துவ கல்லூரிகளுக்கும், தனியார் துறையில் 16 மருத்துவ கல்லூரிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778831
(Release ID: 1779020)
Visitor Counter : 262