கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து திட்டங்கள்

Posted On: 07 DEC 2021 2:11PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* கேரளாவின் கொச்சியில் புதிய கப்பல் நிறுத்தும் தளத்தை 310 மீட்டர் நீளத்தில்,75  மீட்டர் அகலத்தில், 13 மீட்டர் ஆழத்திலும் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் ரூ.1,799 கோடி செலவில் அமைத்து வருகிறது. இதில் விமானம் தாங்கி போர்க்கப்பல், ஆயில் டேங்கர் கப்பல்களையும் நிறுத்த முடியும். 2023 ஜூலை மாதம் இது செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கொச்சியில் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையம் ரூ.970 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

* மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹூக்ளி கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் அமைக்கப்படுகிறது. தேசிய நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்நிறுவனம் அமைக்கப்படுகிறது.                                                                                                                                              * கர்நாடகாவின் மால்பே பகுதியில், சிஎஸ்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெப்மா  ஷிப்யார்டு நிறுவனம்(டிஎஸ்எல்) ரூ.70 கோடி முதலீட்டில் மீன்பிடி கப்பல் கட்டும் தளத்தை அமைத்துள்ளது. இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. 

* மும்பையில் சிஎஸ்எல் - மும்பை கப்பல் பழுது பார்க்கும் மையம் கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு போர்க்கப்பல் மற்றும் வர்த்தக கப்பல்கள் பழுதுபார்க்கப்படுகிறது. 

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் சிஎஸ்எல்- கொல்கத்தா கப்பல் பழுது பார்க்கும் மையம் 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையமும் போர்க்கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களை பழுதுபார்க்கிறது. 

* போர்ட் பிளேரில் உள்ள , சிஎஸ்எல் - அந்தமான், நிகோபார் கப்பல் பழுது பார்க்கும் மையம், அந்தமான் நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் கப்பல் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்தமான் நிகோர்பார் தீவுகளில் அனைத்து வகை கப்பல்களையும் பழுதுபார்க்க இந்த நிறுவனம் உதவும்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778777

 

****************

 


(Release ID: 1778983)
Read this release in: English , Malayalam