மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய கல்விக் கொள்கை, 2020
Posted On:
06 DEC 2021 4:27PM by PIB Chennai
மத்திய அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் உட்பட அனைத்துத் தரப்பினருடன் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு, தேசிய கல்விக் கொள்கை-2020 இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், செயல்படுத்தும் முகமைகள், முறைப்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்தக் கொள்கையில் ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 2030-க்குள் 100 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கும், 2035-க்குள் உயர்கல்வியில் 50 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்ச்சியான நடைமுறையாகும். தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்கத்திற்கு புதிய வழிமுறைகளை விவாதிக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பயிலரங்குகளும், இணையவழி கருத்தரங்குகளும் நடத்தப்பட்டுள்ளன.
பிறப்பு மற்றும் சூழல் காரணமாக கற்றல் வாய்ப்பையும், திறமையையும் எந்த குழந்தையும் இழந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தேசிய கல்விக் கொள்கை -2020-ன் நோக்கமாகும்.
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1778503)
(Release ID: 1778751)