இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2021 4:29PM by PIB Chennai
கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால் புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். இருப்பினும் மாநில உயர்கல்வி நிறுவனங்களின் முக்கியமான நிதித் தேவைக்கு மத்திய அரசு உதவியின் தேவையை அங்கீகரித்து எளிதாகவும், சமமாகவும், தரமாகவும் உயர்கல்வி கிடைக்கும் நோக்கத்துடன் தேசிய உயர்கல்வி திட்டத்தை (ஆர்யூஎஸ்ஏ) மத்திய கல்வி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற கல்வி, நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட சில முன் தேவைகளை மாநிலங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவது தற்போதுள்ள அவற்றின் திறன்களை விரிவுபடுத்துவது ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம் இவை உள்ளுர், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் விரைவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெற முடியும்.
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1778506)