பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள்

Posted On: 06 DEC 2021 3:37PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் திரு பி வில்சனின் கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு பாதுகாப்புத்  தொழில்துறை வழித்தடம் தொடர்பாக இந்திய அரசுக்கு மூன்று பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகளின் விவரங்கள் மற்றும் நிலவரம்  பின்வருமாறு:

(i) பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புச்  சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சோதனை வசதிகளை நிறுவுதல். ஒப்பந்த செயல்பாட்டில் பங்கேற்கவும், இது தொடர்பான நடைமுறை/திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

(ii) தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் சுமார் 160 ஏக்கர் பாதுகாப்பு நிலத்தை விமானத் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க குத்தகைக்கு விடுதல். இந்த முன்மொழிவு தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தால் அடையாளம் காணப்பட்ட முனைகளுக்கு வெளியே உள்ளது.

(iii) சென்னை விமான நிலையத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விமான பராமரிப்பு, பழுதுபார்த்தல், புனரமைத்தல் வளாகத்தை அமைப்பதற்கான முன்மொழிவு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும் பொது / தனியார் தொழில்களில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  திட்டத்தில் உள்ள தொழில்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக விண்வெளி மற்றும் பாதுகாப்பு  கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை பூங்காக்கள், விண்வெளி பூங்காக்கள் போன்றவற்றை உருவாக்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர், 39 தனியார்/பொதுத் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் செய்துகொண்டுள்ளனர்.

திட்டமிடப்பட்ட முதலீடு ரூ 12226.00 கோடி எனும் நிலையில், பல்வேறு தனியார்/பொதுத் தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,200 கோடிக்கும் அதிகமான முதலீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்வெளி பூங்கா மேம்பாட்டிற்கு தமிழக அரசு ரூ 30 கோடி செலவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778461

-----


(Release ID: 1778552) Visitor Counter : 1046
Read this release in: English , Urdu