பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

சிறந்த ஆளுகை நடைமுறைகளை மாநிலங்கள் ஒன்றையொன்று பார்த்துப் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 04 DEC 2021 4:48PM by PIB Chennai

சிறந்த ஆளுகை நடைமுறைகளை மாநிலங்கள் ஒன்றையொன்று பார்த்துப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற நல்ல நிர்வாக நடைமுறைகளின் பிரதிபலிப்புஎன்பது குறித்த மண்டல  மாநாட்டின் மதிப்பாய்வு அமர்வில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகம் திரு மோடி அரசாங்கத்தின் ஆட்சி மாதிரியின் இதயத்தில் உள்ளது என்று கூறினார்.

ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே நோக்கமாக இருப்பதால், மேம்பட்ட நிர்வாகத் தரத்தை நோக்கிய  இந்திய அரசின் நடைமுறைகள்  மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றார் அவர்.

நிர்வாகத்தில் உள்ள சிறந்த நடைமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார், மேலும், நல்ல நடைமுறைகள் பகிரப்படும்போது சிறந்த நடைமுறைகளாக மாறும் என்றும் இதன் மூலம் உயர்ந்த தரங்களை அடையலாம் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் மாவட்டங்களின் நிர்வாக புதுமைகளை பிரபலப்படுத்துமாறு அனைத்து பங்கேற்பாளர்களையும் அமைச்சர் வலியுறுத்தினார், இதனால் "குறைந்தபட்ச அரசு தலையீடு, அதிகபட்ச ஆளுகை" என்ற நம்பிக்கையுடன் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை அடித்தள நிலை முதல்  செயல்படுத்த முடியும் என்றார் அவர்.

2014-ல் திரு மோடி அரசு பதவிக்கு வந்தபோது, குறைதீர்ப்பு நடை முறையில்   இருந்த சில பலவீனங்களை களைய வேண்டிய அவசியம் உணரப்பட்டது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். இன்று, துறைகளில் 90 முதல் 95% வரை குறைதீர்ப்பு விகிதம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778021

****



(Release ID: 1778085) Visitor Counter : 218