மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம்
प्रविष्टि तिथि:
03 DEC 2021 5:29PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபாலா இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தை 2020-21ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.20,050 கோடி முதலீட்டில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது. விரிவாக்க திட்டங்கள் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்பது, நவீனமயமாக்கல் மூலம் விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது, மீனவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.
நீர் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மத்திய மீன்வளத்துறை எடுத்து வருகிறது. இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஆண்டுக்கு 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அபாயகரமான மீன்பிடி முறைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ், ஒடிசா அரசின் மீன்வளத்துறை மேம்பாட்டு திட்டங்களுக்கு 2021-22ம் நிதியாண்டில் ரூ.440.56 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777694
****
(रिलीज़ आईडी: 1777874)
आगंतुक पटल : 219