விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விதை தொடர்பான திட்டங்கள் அமலாக்கம்

Posted On: 03 DEC 2021 5:08PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக  இன்று பதில் அளித்த மத்திய வோளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

 

விதை உற்பத்தியை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் விவசாயிகளக்கு தரமான விதைகள் மற்றும் நடவு பொருட்கள் கிடைக்கவும் பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.  தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (NFSM), நிலையான விவசாயத்துக்கான தேசிய திட்டத்தின் கீழ் துணைத் திட்டங்கள் (NMSA), விதைகள் மற்றும் நடவு பொருட்களுக்கான துணை திட்டம் (SMSP), ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் திட்டம் போன்றவை விதை உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கான அம்சங்களைக் கொண்டுள்ளன.

 

இதோடு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஏஆர்), விதை அறிவியல் இந்திய மையம் இரண்டு தேசிய அளவிலான திட்டங்களை  ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன. அவை அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம், தேசிய விதை திட்டம் மற்றும் ஐசிஏஆர் விதை திட்டம் ஆகும்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதைகள் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட ஆண்டு செயல்திட்டத்தை அமல்படுத்த மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. அவற்றின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777681

****

 


(Release ID: 1777843) Visitor Counter : 212
Read this release in: English , Urdu