விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் துறையின் டிஜிட்டல் மயமாக்கம்
Posted On:
03 DEC 2021 5:10PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதில் அளித்த மத்திய வோளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:
வேளாண்துறையை டிஜிட்டல் மயமாக்கவும், வேளாண் தொழில்நுட்ப தொழிலை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
வேளாண்மைக்கான இந்திய டிஜிட்டல் சூழல் அமைப்பு (ஐடியா) என்ற கட்டமைப்பை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இதன் மூலம் பல திட்டங்களில் உள்ள விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நில பதிவுகளுடன் இணைக்கப்படுகின்றனர். புதுமையான வேளாண் தீர்வுகளை உருவாக்க ‘ஐடியா’ கட்டமைப்பு அடித்தளமாக செயல்படும். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களுக்கு உதவும். மேலும், அரசுடன் இணைந்து செயல்பட தொழில்நுட்பம் / வேளாண் தொழில்நுட்பம்/ தொடக்க நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வேளாண்மை தேசிய மின்னணு-ஆளுகை திட்டத்தின் கீழ் (NeGP-A) செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், ரோபோடிக்ஸ், ட்ரோன்கள், தரவு பகுப்பாய்வு, பிளாக் செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படுகிறது.
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலைகள் கிடைக்க வெளிப்படையான ஆன்லைன் ஏல முறையை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு தேசிய மின்னணு வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தை தொடங்கியுள்ளது. 2021ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதிவரை இ-நாம் தளத்தில் 1.72 கோடி விவசாயிகளும், 2.05 லட்சம் வர்த்தகர்களும் பதிவு செய்துள்ளனர். 18 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1000 மண்டிகள் இ-நாம் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777684
****
(Release ID: 1777835)