சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டெங்கு பரவல்

Posted On: 03 DEC 2021 3:23PM by PIB Chennai

நாட்டில் டெங்கு குறித்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு (21.11.2021 வரை) மொத்தம் 1,64,103 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,05,243 ஆக இருந்தது. இறப்பு விகிதம் 2008-ல் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இது மேலும் குறைந்து 2018-ல் 0.2 சதவீதமாகவும், 2019-ல் 0.1 சதவீதமாகவும் இருந்தது. இதன் பிறகு இதே நிலையில் நீடிக்கிறது. இதனால் நாட்டில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூற இயலாது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777639

*****


(Release ID: 1777779)
Read this release in: English , Urdu