கலாசாரத்துறை அமைச்சகம்
கலா சமஸ்கிருதி விகாஸ் திட்டத்தின் கீழ் பெளத்த /திபெத்திய கலாச்சாரம் மற்றும் கலை வளர்ச்சிக்கான நிதி உதவி திட்டத்தை கலாச்சார அமைச்சகம் செயல்படுத்துகிறது
Posted On:
02 DEC 2021 5:51PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பௌத்த/திபெத்திய கலாச்சாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மடங்கள் உள்ளிட்ட தன்னார்வ பௌத்த/திபெத்திய அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்தோடு பௌத்த/திபெத்திய கலாச்சாரம் மற்றும் கலை வளர்ச்சிக்கான நிதி உதவி திட்டம் எனும் நிதி மானிய திட்டத்தை கலாச்சார அமைச்சகம் செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் எந்தப் பகுதியிலும் அமைந்துள்ள பௌத்த/திபெத்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்புதல் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மடாலயங்கள் உள்ளிட்ட தன்னார்வ பௌத்த மற்றும் திபெத்திய அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ 30 லட்சம் வழங்கப்படுகிறது. அதிகபட்ச வரம்புக்கும் அதிகமான தொகையை பரிந்துரைக்கும் அதிகாரத்தை இந்தத் திட்டத்தின் நிபுணர் ஆலோசனைக் குழு பெற்றுள்ளது, ஆனால் அது ரூ 1 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777336
(Release ID: 1777462)
Visitor Counter : 240