சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையினர் சட்டம்

Posted On: 02 DEC 2021 4:14PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அறிவிப்பு மூலம்,  நாட்டின் இதர பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் சட்டத்துக்கான தேசிய ஆணையம், 1992, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான தடைகளை நீக்கியுள்ளது. முன்பு ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாத 170 மத்திய சட்டங்கள், தற்போது அங்கு பொருந்தம். 334 மாநில நட்டங்களில் 164 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன, 167 சட்டங்கள் இந்திய அரசியல் சாசனப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஜம்மு காஷ்மீர் மக்கள், முக்கிய சட்டங்களின் பயன்களை பெறுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777251

****
 



(Release ID: 1777446) Visitor Counter : 186


Read this release in: English , Urdu