சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயிரி எரிபொருள்களை பயன்படுத்தும் வாகனங்களின் பயன்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2021 3:57PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

 

வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தொழிலுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு செப்டம்பர் 15, 2021 அன்று  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 5 ஆண்டுகளில் ரூ 25,938 கோடி மதிப்பீட்டில் இது செயல்படுத்தப்படும்.

 

எத்தனால் 85 எரிபொருள் வரை பயன்படுத்தக்கூடிய நெகிழ்வுத்தன்மை மிக்க எஞ்சின் மற்றும் இத்தகைய இதர எஞ்சின்கள் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவை ஆகும். இதன் மூலம் நாட்டில் உயிரி எரிபொருள்களை பயன்படுத்தும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777243

****


(வெளியீட்டு அடையாள எண்: 1777411) வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu