சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 DEC 2021 3:56PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பல்முனை இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதற்கான பிரதமரின் கதி சக்தி மாபெரும் செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு அக்டோபர் 2021-ல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
பொருளாதார மண்டலங்கள் மற்றும் அவற்றை ஆதரிக்க தேவையான உள்கட்டமைப்பு இணைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் அனைத்து பல்முனை இணைப்பு திட்டங்களையும் முழுமையாக ஒருங்கிணைத்து, மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் தடையற்ற இயக்கத்திற்கான இடைவெளிகளை அகற்றுவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
முழுமையான திட்டமிடல் மற்றும் வளர்ச்சியை நாடு முழுவதும் இத்திட்டம் கொண்டுவரும். நாட்டின் உற்பத்தி இதன் மூலம் அதிகரிப்பதோடு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் முதலீட்டை ஈர்க்கவும் இது துணைபுரியும். தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777241
****