சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள்

Posted On: 02 DEC 2021 3:54PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

 

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் வழங்கப்படும் சாலைவழி வசதிகளின் ஒரு பகுதியாக மின்சார வாகன மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள் கட்டுமான நிறுவனத்தால் நிறுவப்பட வேண்டும்.

 

இதுபோன்ற 39 வசதிகளை ஏற்கனவே ஆணையம் வழங்கியுள்ளது . மேலும் 103 தளங்களுக்கான முன்மொழிவுகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. ஏற்கனவே ஒப்புதலளிக்கப்பட்ட பணிகள் 2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அரசு நிறுவனங்கள்/பொதுத்துறை நிறுவனங்கள் (மாநில/மத்திய)/ அரசு விநியோக நிறுவனங்கள்/ எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது/தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பை உருவாக்க மற்றும் இயக்குவதற்கான முன்மொழிதல்களை கனரக தொழில்துறை அமைச்சகம் வரவேற்றிருந்தது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777239

****



(Release ID: 1777403) Visitor Counter : 154


Read this release in: English , Urdu