வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

2.68 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் 2.64 கோடி கழிவுநீர் குழாய் இணைப்புகள் வழங்குவது அம்ருத் 2.0-ன் இலக்கு

Posted On: 02 DEC 2021 4:41PM by PIB Chennai

2015, ஜூன் 25-ல் 500 நகரங்களில் அம்ருத் இயக்கம் தொடங்கப்பட்டது. தற்போது அம்ருத் 2.0 கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

துப்புரவு என்பது மாநிலம் சார்ந்த விஷயம் என்பதால் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்க அமலாக்கத்திற்கான திட்டமிடல் மாநில அரசு சார்ந்ததாகும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு கௌஷல் கிஷோர் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0 கீழ் ஒவ்வொரு வீடு மற்றும் வளாகத்தில் பிரிக்கப்பட்ட கழிவுகள் 100 சதவீதம் சேகரிக்கப்படுகின்றன.

ரூ.41,847 கோடி மதிப்பில் 1,326 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன அம்ருத் திட்டத்தின் கீழ் 114 லட்சம் புதிய குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 4372 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 4371 அமைப்புகள்  திறந்தவெளியில் மலம் கழிக்காதவையாக சான்றளிக்கப்பட்டுள்ளன என்ற தகவல்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777284

                                  *****



(Release ID: 1777386) Visitor Counter : 173


Read this release in: Telugu , English