இடுகை இடப்பட்ட நாள்:
02 DEC 2021 2:12PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொற்ப்பு) இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
புவி அறிவியல் அமைச்சகம் அதனுடன் இணைந்துள்ள நிறுவனங்களில் நெகிழி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும், கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், கடல் வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையம், கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் மற்றும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை கடற்கரையை சுத்தமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், பிரச்சாரங்கள், விரிவுரைகள் மற்றும் தொடர் வலைதளயரங்குகள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளின் மாசுபாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777175
****