மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள்

Posted On: 01 DEC 2021 5:59PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

 

 

டிஜிட்டல் கல்விக்கான பிரக்யாதா டிஜிட்டல் உள்கட்டமைப்பை கருத்தில் கொண்டு டிஜிட்டல் கல்வி குறித்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

 

இணைய வசதியை சார்ந்துள்ள ஆன்லைன் முறை, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பிற ஆஃப்லைன் செயல்பாடுகளின் கலவையான அணுகுமுறையைப் பயன்படுத்தும் பகுதியளவு ஆன்லைன் பயன்முறை, தொலைக்காட்சி மற்றும் வானொலியை முக்கிய பயிற்றுவிக்கும் ஊடகமாகப் பயன்படுத்தும் ஆஃப்லைன் பயன்முறை உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் கல்வி முறைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

வழிகாட்டுதல்களை இங்கு காணலாம்: https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/pragyata-guidelines_0.pdf

 

அனைத்து பெண் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கு சமமான, தரமான கல்வியை வழங்குவதற்கான நாட்டின் திறனை கட்டமைக்க பாலின உள்ளடக்கல் நிதியை உருவாக்குவதற்கான வழிமுறையை தேசிய கல்வி கொள்கை, 2020 வழங்குகிறது.

 

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக பள்ளிப் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உருவாக்கி, அவற்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகித்துள்ளது.

 

வழிகாட்டுதல்களை https://dsel.education.gov.in/archives-update?title=&field_update_category_target_id=All எனும் முகவரியில் காணலாம்.


மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776914(Release ID: 1777069) Visitor Counter : 131


Read this release in: English , Urdu