வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

Posted On: 01 DEC 2021 4:27PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர்கள் திரு சோம் பர்காஷ் மற்றும் திருமதி அனுப்பிரியா பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தனர். 

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் விவரங்கள் பின்வருமாறு:
 

2016-17-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 60,220 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 7,735 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 60,974 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 22,165 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

2016-17-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 60,220 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 7,735 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 62,001 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு (-)2,225 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.  

2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 74,390 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 52 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

2020-21-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 81,973 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 38,725 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

இந்தியாவின் மின்-வணிக சந்தை ஆண்டுக்கு 5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது என்றும், 2021 நிதியாண்டில் வருவாய் மதிப்பு 56.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் நாஸ்காம் தெரிவிக்கிறது. 

இத்துறையில் மூலம் எதிர்பார்க்கப்படும் மொத்த வருவாய் அல்லது உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பற்றிய தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை.

தற்சார்படைய வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை தொடர்ந்து, நாட்டின் உற்பத்தித் திறன்கள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த 13 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களுக்காக 2021-22 மத்திய பட்ஜெட்டில் ரூ 1.97 லட்சம் கோடி ($ 26 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. 

பதிமூன்று முக்கிய துறைகளில் ஏற்கனவே உள்ள 3 துறைகளான  மொபைல் உற்பத்தி மற்றும் குறிப்பிட்ட மின்னணு பொருட்கள்;  முக்கிய தொடக்க பொருட்கள்/மருந்து இடைப்பொருட்கள் மற்றும் செயல்மிகு மருந்து பொருட்கள்; மருத்துவ சாதனங்கள் உற்பத்தி ஆகியவை அடங்கும். 

நவம்பர் 2020-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட 10 முக்கிய துறைகளின் விவரங்கள் வருமாறு: 

வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள்; மருந்துகள்; சிறப்பு ஸ்டீல்;  தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் தயாரிப்புகள்; மின்னணு/தொழில்நுட்ப பொருட்கள்; வீட்டு சாதன பொருட்கள் (ஏசி மற்றும் எல்இடி); உணவுப் பொருட்கள்; ஜவுளிப் பொருட்கள்; அதிக திறன் கொண்ட சூரிய ஒளி மின்னழுத்த பொருட்கள்; மற்றும் மேம்பட்ட வேதியியல் செல் பேட்டரி. 

திருத்தப்பட்ட காப்புரிமை விதிகள்-2003, 2021 செப்டம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தது. மற்ற நிறுவனங்கள் செலுத்தும் கட்டணத்தை விட 80 சதவீதம் குறைவான கட்டணத்தின் பலனைக் குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்கள் பெறும்.

ஸ்டார்ட்-அப்களின் அறிவுசார் சொத்து பாதுகாப்பை எளிதாக்குவதற்கான திட்டம் 2016-ல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்-அப்களின் நலனுக்காக இது செயல்படுத்தப்பட்டது. நாட்டில் அறிவுசார் சொத்துரிமைகள் சூழலியலை வலுப்படுத்த இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

தேசிய ஏற்றுமதிக் காப்பீட்டுக் கணக்கு அறக்கட்டளையானது, திட்டங்கள் மற்றும் பிற உயர் மதிப்பு ஏற்றுமதிகளுக்கான காப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, வெளிநாடுகளில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இந்தியாவின் திறனை இது காட்டுகிறது.

இந்த அறக்கட்டளைக்கு 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதி உதவிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
2021-22 முதல் 2025-26 வரை அறக்கட்டளைக்கு ரூ.1,650 கோடி மானியம் வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிலுவையில் உள்ள ஏற்றுமதி ஊக்கத்தொகையை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ரூ 56,027 கோடியை விடுவித்துள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு இது பொருந்தும். 

ஏற்றுமதி இலக்குகளை எட்டுவதற்காக பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி, பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2015-20 31 மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகைகள், உதவித்தொகைகள் மற்றும் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776840


 


(Release ID: 1777028) Visitor Counter : 183


Read this release in: English , Urdu