பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஊராட்சி முறையில் பெண்களின் பிரதிநிதித்துவம்
Posted On:
01 DEC 2021 5:00PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 243-ஆவது பிரிவு உப பிரிவு D, ஊராட்சிகளின் நேரடி தேர்தல் நடத்தப்பட்டு, நிரப்பப்படும் இடங்கள் மற்றும் தலைவர்களின் மொத்த எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கிற்கும் குறையாத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வகை செய்கிறது.
இருப்பினும், அமைச்சகத்திற்கு கிடைத்த தகவலின்படி, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா உட்பட 21 மாநிலங்கள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் மாநில பஞ்சாயத்துராஜ் சட்டங்கள் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின், நிதி ஆணையம் செய்யும் பரிந்துரைகள் அடிப்படையில், பஞ்சாயத்துகளுக்கான கூடுதல் நிதி ஆதாரங்களுக்கு மாநிலத்தின் தொகுப்பு நிதியத்திலிருந்து மத்திய நிதி ஆணையம் நிதி வழங்க அரசியல் சட்டத்தின் பிரிவு 280 உட்பிரிவு 3 (bb) படி பரிந்துரை செய்கிறது.
இதற்கேற்ப 15 ஆவது மத்திய நிதி ஆணைய இறுதி அறிக்கையின் படி, 2021-22 –க்கு பரிந்துரை செய்த நிதி ரூ.44,901 கோடி என்றும், 2021 நவம்பர் 17 வரை விடுவிக்கப்பட்ட நிதி ரூ.22,327.90 கோடி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
•••••••••••••
(Release ID: 1777018)
Visitor Counter : 382