நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பலவகையான பயிர் சாகுபடிக்கு விவசாயிகளை ஊக்குவிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
Posted On:
01 DEC 2021 5:15PM by PIB Chennai
நாடுமுழுவதும் அரசு முகமைகளால் கொள்முதல் செய்வதற்கு வெளிப்படையான, ஒரே சீரான கொள்கை தற்போது இருப்பதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், மத்திய அரசின் நெல் கொள்முதல் கொள்கை தொடர்பாக மாநிலங்களிடையே குழப்பம் ஏதும் இல்லை என்றார்.
பலவகையான பயிர் சாகுபடிக்கு விவசாயிகளை ஊக்குவிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு கணிசமாக உயர்த்தி இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
************
(Release ID: 1777016)
Visitor Counter : 197