அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பரிணாம வளர்ச்சியடைந்த சில நட்சத்திரங்களில் லித்தியம் அபரிமிதமாக இருப்பதன் பின்னணியில் உள்ள மர்மம் கண்டுபிடிப்பு
Posted On:
30 NOV 2021 2:00PM by PIB Chennai
பூமியில் கிடைக்கக்கூடிய தனிமமும், ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளின் முக்கிய பகுதியுமான லித்தியம், பரிணாம வளர்ச்சியடைந்த சில நட்சத்திரங்களில் அபரிமிதமாக இருப்பதற்கான தடயத்தின் பின்னணியில் உள்ள மர்மத்திற்கான விடையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒரு வகை நட்சத்திரங்களின் மேற்பகுதியில், ஏராளமான அளவுக்கு லித்தியம் இருப்பதை, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, வானவியல் அறிஞர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஒரு சதவீத ராட்சத சிவப்புக் கோள அளவிற்கு லித்தியம் படிந்திருப்பதற்கான காரணம் ஒரு மர்மமாகவே இருந்து வந்தது. நட்சத்திரங்களின் சூடான பிளாஸ்மாவில் லித்தியம் எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதற்கான காரணமும் அறியப்படாமல் இருந்தது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு உட்பட்ட, பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வான் இயற்பியல் நிறுவன விஞ்ஞானி தீபக் மற்றும் இந்த நிறுவனத்தின் கவுரவ பேராசிரியரும், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக கவுரவ பேராசிரியருமான டேவிட் லாம்பர்ட் ஆகியோர், லித்தியம் அதிகமாக உள்ள நட்சத்திரங்கள், ஹீலியத்தை எரிப்பதை முதன்முதலில் கண்டறிந்தனர். “மேற்பரப்பில் அபரிமிதமான அளவிற்கு லித்தியத்தைக் கொண்டுள்ள ராட்சத சிவப்புக் கோளம் ஒன்று, நாற்பதாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற அம்சங்களைப் பொறுத்தபவரை, இந்த ராட்சத சிவப்புக் கோளம் வழக்கமான வகையிலேயே இருந்தது. முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சூரியனைப் போன்ற சிவப்புக் கோளத்தின் மேற்பரப்பில் செறிவூட்டப்பட்ட லித்தியம் காணப்பட்டது, தங்களை பேரார்வத்தில் ஆழ்த்தியதாக, விஞ்ஞானி தீபக் கூறுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, லித்தியம் அபரிமிதமாக உள்ள ராட்சத நட்சத்திரங்களின் மூலத்தைக் கண்டறிந்தனர். இது தொடர்பான விண்மீன் – கதிர்வீச்சு ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர். இந்த லித்தியம் மிகுந்துள்ள நட்சத்திரங்கள், ஹீலியத்தை எரிப்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
*****
(Release ID: 1776579)