கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

14.53 லட்சம் கலைஞர்கள்/கைவினைஞர்களின் புள்ளி விவரங்களை சேகரித்த தேசிய கலாச்சார இயக்கம்

Posted On: 29 NOV 2021 5:11PM by PIB Chennai

கலைஞர்கள், அனைத்து விதமான கலைகள் மற்றும் பிற வளங்கள் பற்றிய விரிவான புள்ளி விவரத்தைத் தயாரிப்பதற்காக, மத்திய கலாச்சார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்  தேசிய கலாச்சார இயக்கம்  தொடங்கப்பட்டது.  பிற அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வலுவான தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.   மத்திய ஜவுளி அமைச்சகம், சங்கீத நாடக அகாடமி, லலித்கலா அகாடமி, சாகித்ய அகாடமி, தேசிய நாடகப் பள்ளி, கலாச்சார உறவுகள் மற்றும் பயிற்சி மையம், மண்டல கலாச்சார மையங்கள், கலாக்சேத்ரா அறக்கட்டளை போன்றவற்றிடமிருந்து, 14.53லட்சம் கலைஞர்கள் / கைவினைஞர்கள் பற்றிய தேவையான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. 

மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி, மக்களவையில் இன்று (29.11.2021) இத்தகவலை தெரிவித்துள்ளார். 

                                                            *****


(Release ID: 1776243) Visitor Counter : 248


Read this release in: English , Urdu