அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உள்நாட்டில் லித்தியம்-அயன் மின்கலம் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய அரசின் ஏஆர்சிஐ, பெங்களூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Posted On: 27 NOV 2021 5:21PM by PIB Chennai

லியான் மின்கல தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க லியான் மின்கலன்களை உருவாக்குவதற்கான பரிசோதனைக் கூடம் பெங்களூரில் விரவைில் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பவுடர் மெட்டலார்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ்-க்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம்(ஏஆர்சிஐ), பெங்களூரில் உள்ள என்சுயர் ரிலையபிள் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தை கடந்த 25ம் தேதி செய்தது. 

 

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. லியான் மின்கல நடைமுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிபுணத்துவம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் லியான் மின்கலப் பயன்பாட்டின் வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பப் பரிமாற்றம் இருக்கும்.

 

இது குறித்து ஏஆர்சிஐ நிர்வாக கவுன்சில் தலைவர் டாக்டர். அனில் ககோதார் கூறுகையில், ‘‘ஏர்சிஐ மற்றும் என்சுயர் ரிலையபிள் பவர் சொல்யூஷன்ஸ் இடையேயான கூட்டுறவு, பருவநிலை மாற்ற சவால்களுக்குத் தீர்வு காண்பதில் முக்கியமான மைல்கல், எனவும், இதுபோன்ற தொழில்சூழல் நாட்டில் உருவாக இந்த ஒப்பந்தம் முன்மாதிரியாக இருக்கும்’’ என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775610

 

******


(Release ID: 1775673) Visitor Counter : 248


Read this release in: English , Hindi , Bengali , Telugu