ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருந்து தயாரிப்புத் துறையினருக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்

Posted On: 26 NOV 2021 4:25PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா-இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் பத்து துறைகளில் ஏற்றுமதியை அதிகரித்தல்“  என்ற உத்தியின் அடிப்படையில், மருந்து தயாரிப்பு தொழில் துறையினருக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை 24.2.2021-ல் ஒப்புதல் அளித்ததுஇத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதற்கான வழிகாட்டு நெறிமுகைள், தொழில்துறையினர், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நித்தி ஆயோக்குடன் ஆலோசனை நடத்தி,  01.06.2021 அன்று வெளியிடப்பட்டது

மருந்து தயாரிப்பில் உயர்மதிப்புள்ள பல்வேறு மருந்துப் பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியப் பங்காற்றும் வகையில்உற்பத்தித் துறையில் முதலீட்டை அதிகரித்து, இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதேஇத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.   துல்லியமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகளாவிய மதிப்புச் சங்கிலியை புகுத்திஇந்தியாவை உற்பத்தித் துறையின் முன்னோடி ஆக்குவதும், இத்திட்டத்தின் நோக்கமாகும்

இத்திட்டத்தின்கீழ்உயிரி மருந்துப் பொருட்கள், உயிர்காக்கும் மருநதுகள், காப்புரிமை பெற்ற மருந்துகள் தயாரிக்க ஊக்கமளிக்கப்பட உள்ளது.           

கூடுதல் விவரங்களுக்கு  https://pharmaceuticals.gov.in/schemes. காணவும்

                                                                                         *****



(Release ID: 1775445) Visitor Counter : 333


Read this release in: English , Hindi , Telugu