அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலகின் முதல் பல்முனை மூளை படமிடல் தரவு மற்றும் பகுப்பாய்வு முறையான ஸ்வதேஷ், உயிரி தொழில்நுட்பத் துறையால் ஹரியானாவில் உள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
26 NOV 2021 4:03PM by PIB Chennai
உலகின் முதல் பல்முனை மூளை படமிடல் தரவு மற்றும் பகுப்பாய்வு முறையான ஸ்வதேஷ், உயிரி தொழில்நுட்பத் துறையால் ஹரியானாவில் உள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மூளை மற்றும் நரம்பியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கான பகுப்பாய்வுகளில் கவனம் செலுத்தும் ஒரு தனித்துவமான முயற்சி இதுவாகும்.
குறிப்பாக இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பல்முனை படமிடல் தரவுத்தளமான இது, பெரிய தரவு கட்டமைப்பு மற்றும் பல்வேறு நோய் வகைகளுக்கான பகுப்பாய்வுகளுடன் ஒரே தளத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19 2021 அன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் ஸ்வதேஷை தொடங்கி வைத்தார். அல்சைமர் நோய் ஆராய்ச்சியை வலுப்படுத்த மற்றும் நம்பிக்கைக்குரிய சிகிச்சைகளை விஞ்ஞான சமூகம் கொண்டு வர இது உதவும்.
இந்த முன்முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்த துறையின் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, "மூளை ஒரு சிக்கலான உறுப்பு. ஸ்வதேஷ் போன்ற தரவுத்தளங்கள் அல்சைமர் நோய் மற்றும் பல நரம்பியல் கோளாறுகளைப் புரிந்துகொள்வதற்காக பல்முனை மூளை ஆய்வுகளை மேற்கொள்வதில் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775313
**********
(रिलीज़ आईडी: 1775444)
आगंतुक पटल : 364