அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சமூக-கலாச்சார மாற்றங்கள், நெகிழ்வு வேலை நேரம் மற்றும் பாலின சமத்துவ ஊதியங்கள் ஆகியவற்றின் தேவை குறித்து இந்திய-இஸ்ரேல் பெண்கள் ஸ்டெம் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது
Posted On:
26 NOV 2021 4:09PM by PIB Chennai
நவம்பர் 24, 2021 அன்று நடைபெற்ற இந்தியா-இஸ்ரேல் பெண்கள் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மாநாட்டில், மேற்கண்ட துறைகளில் பாலின சமத்துவத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்த இந்தியா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த நிபுணர்கள், சமூக-கலாச்சார சூழலில் மாற்றங்களின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
ஆயிரமாண்டுகளில் வரலாற்று ரீதியாக ஸ்டெம் துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது பற்றி குறிப்பிட்ட இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு கே விஜய்ராகவன், பொருளாதாரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எந்தளவு இடம்பெற்றுள்ளது, நமது நிறுவனங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த கேள்விகளை எழுப்பினார்.
ஸ்டெம்மில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க நெகிழ்வான வேலை நேரங்கள் மற்றும் பாலின-சமத்துவ ஊதியங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலின் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணைத் தலைமை விஞ்ஞானி டாக்டர் கயா லோரன் கூறுகையில், எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்கான முதலீடாக தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் பங்கேற்பை இஸ்ரேல் கண்டுபிடிப்பு ஆணையம் கருதுகிறது என்று கூறினார்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் இஸ்ரேலின் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775315
********
(Release ID: 1775438)
Visitor Counter : 235