வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வீட்டு மின்சாதனப் பொருட்களுக்கான உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கை - டிபிஐஐடி செயலாளர் திரு அனுராக் ஜெயின்

Posted On: 26 NOV 2021 12:19PM by PIB Chennai

வீட்டு மின்சாதனப் பொருட்களுக்கான உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கை தொடர்பான உயர்மட்ட டிபிஐஐடி-எஃப்ஐசிசிஐ முதலீட்டாளர் வட்டமேசை கூட்டத்தில் உரையாற்றிய போது டிபிஐஐடி செயலாளர் திரு அனுராக் ஜெயின் ஏசி உற்பத்தித் தொழிலைப் பொறுத்து இறக்குமதிகளை கண்காணிக்கவும் உள்ளூர் மதிப்புக் கூட்டல் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் படிப்படியான உற்பத்தியை பரிசீலிக்க அரசு விருப்பமாக உள்ளது என்று தெரிவித்தார். வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்ட சில சிஇஓ-க்கள் ஏசி தொழிலில் பிஎம்பி-ஐ கொண்டு வர வேண்டும் என்று முன்வைத்த பரிந்துரைகளுக்கு அவர் பதில் அளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

 வீட்டு மின்சாதனப் பொருட்களுக்கான உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கை என்பதன் கீழ் மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து முதலீடுகளுக்கும் மத்திய மற்றும் மாநில அதிகாரிகளின் அனுமதிகளை விரைந்து பெறுவதை டிபிஐஐடி இப்பொழுது உறுதி செய்கின்றது என்று திரு ஜெயின் மேலும் குறிப்பிட்டார்.  இதன் மூலம் காலக்கெடுவுக்குள் பிஎல்ஐ-ன் கீழான இலக்குகளை அடைய முடியும். 

இந்தியா முன்னெடுத்துச் செல்லக் கூடிய தொழில் பிரிவுகள் மற்றும் வளர்வதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ள தொழில் பிரிவுகள் ஆகியவற்றுக்கு சர்வதேச சந்தைப் போட்டியை தயாராக எதிர்கொள்ளும் வகையில் உதவிகளை வழங்குவதற்காக பிஎல்ஐ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திரு ஜெயின் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775253

************



(Release ID: 1775423) Visitor Counter : 126


Read this release in: English , Hindi , Telugu