பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
प्रविष्टि तिथि:
25 NOV 2021 2:11PM by PIB Chennai
மைல்கல்லாகவும், மேக் இன் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது.
புரோஜெக்ட் 75-ன் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வேலா, மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது. மேற்கு கடற்படை பிரிவின் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் வேலா செயல்படும். மேம்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த கப்பலில் நீண்ட தூர டார்பிடோக்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன. ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வேலாவை, பிரான்சு நாட்டை சேர்ந்த நேவல் குரூப்புடன் இணைந்து மசகான் டாக் கப்பல் தயாரிப்பு நிறுவனம் கட்டமைத்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் இணைத்ததன் மூலம், இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்ந்துள்ளது.
‘விடுதலையின் அமிர்த மகோத்ஸவம்’ மற்றும் ‘போர் வெற்றியின் பொன் விழா’ கொண்டாட்டங்களுடன் இணைந்து ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774978
****
(रिलीज़ आईडी: 1775155)
आगंतुक पटल : 304