அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டறியப்பட்டுள்ள மான்ஸ்டர் கருந்துளையின் புதிய நிலை, ஆரம்பகால பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்களின் பரிணாம வளர்ச்சியில் ஈர்ப்பு விசையின் பங்கை ஆய்வு செய்ய உதவும்

Posted On: 24 NOV 2021 4:28PM by PIB Chennai

பத்து டிரில்லியன் சூரியன்களுக்குச் சமமான, இயல்பை விட 10 மடங்கு அதிக எக்ஸ்ரே உமிழ்வைக் கொண்ட செயல்பாட்டில் உள்ள விண்மீன் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐந்து பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்துள்ளது, தீவிர ஈர்ப்பு விசையில் துகள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய இது உதவும். ஆரம்பகால பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்களின் பரிணாம வளர்ச்சியில் ஈர்ப்பு விசையின் பங்கை ஆய்வு செய்ய இது உதவும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஆய்வு அறிவியலுக்கான ஆர்யபட்டா ஆய்வு மையத்தின் வானியலாளர்கள் 2015-ம் ஆண்டு முதல் கருந்துளை அமைப்பை ஆராய்ந்து வருகின்றனர். டாக்டர் பங்கஜ் குஷ்வாஹா மற்றும் பேராசிரியர் அலோக் சி குப்தா உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை ‘தி அஸ்ட்ரோபிசிக்ஸ் ஜர்னல்’ இதழில் வெளியாகியுள்ளது.

வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.3847/1538-4357/ac19b8

மேலும் தகவல்களுக்கு டாக்டர் பங்கஜ் குஷ்வாஹாவை (pankaj.kushwaha@aries.res.in, pankaj.tifr[at]gmail[dot]com) தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774610

**********



(Release ID: 1774779) Visitor Counter : 177


Read this release in: Hindi , English , Telugu