தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கதையில்லா திரைப்படங்களுக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் அதிக இடம் தரவேண்டியது அவசியமாகும்: ஐஎஃப்எஃப்ஐ-52 இந்தியன் பனோரமா கதையில்லா பிரிவுத்தலைவர்

Posted On: 21 NOV 2021 10:09PM by PIB Chennai

‘வேத்-தி விஷனரி’ என்னும் முதல் படத்தைப் பார்த்த பின்னர் அனைத்து ஜூரி உறுப்பினர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்டினார்கள். அது மிகச் சிறந்த படமாகும். அதில் எந்த விவாதத்திற்கும் இடமில்லை. நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் 52வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவின் கதையில்லாத திரைப்படப்பிரிவில் இந்தியன் பனோரமாவின் முதல் படமாக அது வெளியிடப்பட்டபோது, ஜூரிகள் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் அதற்கு வாக்களித்தனர்.  இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கதையில்லா திரைப்படப்பிரிவின் இந்தியன் பனோரமா தலைவருமான திரு சுப்பையா நல்லமுத்து செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

1939 முதல் 1975ஆம் வரை, 1948 ஜனவரி மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம் உள்ளிட்ட எண்ணற்ற செய்திகளை சேகரித்த வேத் பிரகாஷ் பயணம் குறித்த திரைப்படமான இதன் உச்சக்கட்ட காட்சியைக் கண்டபோது, மெய்சிலிர்த்துப் போனதாக திரு நல்லமுத்து தெரிவித்தார். உண்மையிலேயே சாதனை புரிய விரும்பும் இளைஞர்கள் அந்தத் திரைப்படத்தைக் காணவேண்டும் என்றும், மாணவர்களுக்கு இதைப் போட்டுக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிகப்படியான கதையில்லாத் திரைப்படங்கள் மராத்தி மொழியில் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மாநில அரசின் முன்முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்தார். திரையரங்குகளிலும், ஓடிபி தளங்களிலும் இத்தகைய படங்களுக்கு அதிக இடம் அளிக்கும் வகையில், கொள்கை ஒன்று வகுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773836

------



(Release ID: 1773915) Visitor Counter : 126


Read this release in: Bengali , English , Urdu , Hindi