தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது


சென்னையில் சத்யஜித் ரேவை சந்தித்ததை ஸாபோ நினைவு கூர்ந்தார்

Posted On: 20 NOV 2021 7:47PM by PIB Chennai

கோவாவில் இன்று (2021 நவம்பர் 20) நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் திரு இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

காணொலி செய்தி மூலமாக ஏற்புரை நிகழ்த்திய சர்வதேச திரைப்பட ஆளுமையான திரு இஸ்த்வான், “இந்தியர்களுக்கு எனது படங்கள் குறித்து தெரிந்திருப்பதும் அவர்களில் சிலர் அவற்றை விரும்புவதும் எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதற்காக நன்றியை வெளிப்படுத்திய திரு இஸ்த்வான் சாபோ, பழம்பெரும் இயக்குநர் சத்யஜித் ரே உடனான தனது சந்திப்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

"ரே என்னையும் என் மனைவியையும் இரவு உணவிற்கு அழைத்தார், அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவருடைய படங்கள், திரைப்பட தயாரிப்பு மற்றும் எங்கள் தொழிலைப் பற்றி அருமையான விவாதம் நடத்தினோம். அது ஒரு ஆழமான விவாதம், என்னால் அதை மறக்கவே முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கும் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நவீன சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரே, அவர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

*****************



(Release ID: 1773541) Visitor Counter : 222


Read this release in: English , Urdu , Marathi , Hindi