மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் ஆதார் சேவை மையத்தை இணை அமைச்சர்கள் திரு ராஜீவ் சந்திரசேகர் மற்றும் டாக்டர் வி கே சிங் திறந்து வைக்கவுள்ளனர்

Posted On: 20 NOV 2021 4:31PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதார் சேவை மையத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங் ஆகியோர் இணைந்து 2021 நவம்பர் 21 அன்று திறந்து வைக்கவுள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள 122 நகரங்களில் 166 மையங்களை திறப்பதற்கான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆதார் சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது.

ஆக்ரா, லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் மீரட்டிற்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ஐந்தாவது ஆதார் சேவை மையம் இதுவாகும். கோண்டா, வாரணாசி, மொராதாபாத் மற்றும் சஹரன்பூரில் இத்தகைய மையங்களை இந்திய அரசு விரைவில் திறக்கவுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டு வரும் ஆதார் சேவை மையங்களின் மூலம் ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மக்கள் பெறலாம். வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த மையங்கள் செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773474

-----


(Release ID: 1773501) Visitor Counter : 207


Read this release in: English , Urdu , Hindi