மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத்துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது: டாக்டர் எல் முருகன்
இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2021 6:33PM by PIB Chennai
ஹரியானாவின் குருகிராமில் நாட்டிலேயே முதல்முறையாக நிறுவப்பட்டுள்ள லினாக்-என்சிடிசி மீன்வள தொழில் வழிகாட்டும் மையத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா இன்று திறந்து வைத்தார்.
ரூ 3.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு மீன்வள ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட முதன்மையான மத்திய திட்டமான பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் கீழ் மீன்வளத் துறையின் எதிர்காலத்திற்கான ஒரு மைல்கல்லாக இந்த மையம் செயல்படும் என்று கூறினார்.
பயிற்சி, தொழில் முனைவோர் யோசனைகளை வணிக மாதிரிகளாக மாற்றுதல் மற்றும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வணிகத் தொழில்முனைவோருக்கு முதலீட்டு உதவிகளை வழங்குதல் போன்றவற்றை இந்த மையம் செய்யும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறையை முன்னேற்றி அதில் ஈடுபட்டுள்ளோரின் வருவாயை அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்துறையின் முழுமையான வளர்ச்சிக்காக பிரதமரின் வழிகாட்டுதலில் எடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772362
****
(வெளியீட்டு அடையாள எண்: 1772422)
வருகையாளர் எண்ணிக்கை : 306