தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
முதலாவது ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சர் ஷான் கானரிக்கு ஐஎப்எப்ஐ மரியாதை செலுத்துகிறது
प्रविष्टि तिथि:
16 NOV 2021 4:25PM by PIB Chennai
பிரிட்டிஷ் உளவாளி ஜேம்ஸ்பாண்ட் என்னும் கற்பனை பாத்திரத்தில் முதல்முதலாக நடித்து பிரபலமான சர் ஷான் கானரியின் திரைப்படங்கள் 52 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன. கோவாவில் வரும் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில், திரைப்படங்கள் நேரடியாகவும், இணைய தளம் வாயிலாகவும் திரையிடப்படவுள்ளன. ஷான் கானரியின் ஜனரஞ்சகமான சண்டைக் காட்சிகள், சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷான் கானரி கடந்த ஆண்டு காலமானார். இயான் பிளம்மிங்கின் டாக்டர் நோ (1962), கோல்ட் பிங்கர் (1964), ப்ரெம் ரஷ்யா வித் லவ் (1964), தண்டர்பால் (1965), யு ஒன்லி லிவ் டுவைஸ் (1967), டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர் (1971), நெவர் சே நெவர் அகைன் (1983) போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவற்றில் ப்ரெம் ரஷ்யா வித் லவ் (1964), கோல்ட் பிங்கர் (1964), யு ஒன்லி லிவ் டுவைஸ் (1967), தி ஹண்ட் ஃபார் ரெட் அக்டோபர் (1990), 1988-ல் அவருக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்த தி அன்ட்டச்சபிள்ஸ் (1987) ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரைப்பட விழாவில் வெளியிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772307
****
(रिलीज़ आईडी: 1772398)
आगंतुक पटल : 276