வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்புச் சவாலில் 246 நகரங்கள் பங்கேற்கின்றன, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சிகள்

Posted On: 13 NOV 2021 6:11PM by PIB Chennai

'உலக கழிப்பறை தின' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2021 நவம்பர் 14 முதல் 20 வரை துப்புரவுப் பணியாளர் பாதுகாப்புச் சவால்  குறித்த ஒரு வார கால விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.

மாநிலங்கள், நகரங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கன்டோன்மென்ட் வாரியங்களின் பங்கு மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விருது வழங்கும் விழா மற்றும் குப்பையில்லா நட்சத்திர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நவம்பர் 20, 2021 அன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் நடத்தப்படும் துப்புரவுப் பணியாளர் பாதுகாப்புச் சவாலில் மொத்தம் 246 நகரங்கள் பங்கேற்கின்றன. ஆபத்துகளில்' இருந்து துப்புரவுத் தொழிலாளர்களைக் காத்து இறப்புகளைத் தடுப்பதற்காக, கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க்குகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை இயந்திரமயமாக்குவதை ஊக்குவிப்பதை இந்தச் சவால் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்தம் ரூ 52.5 கோடி பரிசுத்தொகை வெல்லப்படவுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 115 நகரங்களில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆதரவோடு துப்புரவுப் பணியாளர்களுக்கானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் என் எஸ் கே எஃப் டி சி மூலம் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1771484

****



(Release ID: 1771527) Visitor Counter : 198


Read this release in: English , Urdu , Hindi