அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
21-ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை 20-ம் நூற்றாண்டு மனநிலையுடன் பெற முடியாது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
13 NOV 2021 6:19PM by PIB Chennai
21-ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை 20-ம் நூற்றாண்டு மனநிலையுடன் பெற முடியாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
21-ம் நூற்றாண்டு இந்தியாவில் உருவாகி வரும் அற்புதமான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சரியான மனநிலையை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
“அமிர்த மஹோத்ஸவத்தை” முன்னிட்டு ஜம்மு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த “இந்தியாவுக்கு இளைஞர்களின் பங்களிப்பு @ 100” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், மனநிலையை மறுசீரமைக்காவிட்டால், புதிய வழிகள் உகந்த பலனைத் தராது என்றார். அதிக லட்சியம் கொண்ட இன்றைய இந்தியாவில், இளைஞர்களுக்கான தற்போதைய தாரகமந்திரம் "லட்சியம், புதுமை மற்றும் போட்டி" என்று அவர் கூறினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் பேசுகையில், “உலகில் உள்ள எந்த அரசாங்கமும் அனைத்து இளைஞர்களுக்கும் அரசு வேலை வழங்க முடியாது, ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொறுப்பான அரசாங்கம் அரசு வேலையை விட அதிக லாபம் தரும் வாழ்வாதாரத்தை வழங்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது,” என்றார்.
“ஆனால் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள, இளைஞர்கள் தங்கள் மனநிலையை அரசு வேலையின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். இது குறித்து பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டும், அதே சமயம், அரசு வேலை குறித்த பொய்யான உறுதிமொழிகளை வழங்குவதில் இருந்து அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1771485
************
(रिलीज़ आईडी: 1771522)
आगंतुक पटल : 282