குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 29 OCT 2021 7:04PM by PIB Chennai

நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

கோவா சென்ற குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு ராஜ்பவனில் பிரபல கொங்கனி குழு, மராத்தி எழுத்தாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் திரு வெங்கையா நாயுடு பேசியதாவது:

நமது தாய்மொழிகள்தான் நம்மை நமது பாரம்பரியத்துடன் இணைக்கின்றன மற்றும் நமது சமூக-கலாச்சார அடையாளத்தை  வரையறுக்கின்றன.  நமது சிந்தனைகளையும், கருத்துக்களையும், படைப்புகளையும் நமது சொந்த மொழிகளில் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். கோவா வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. தற்போது கொங்கனி மொழி வளர்ச்சி பெற்றுள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மொழிபெயர்ப்பில் தற்போது தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாநில நிர்வாகத்தில் உள்ளூர் மொழியை பயன்படுத்த வேண்டும். அனைத்து வகையான கலைகளிலும் கோவா மக்களுக்கு உள்ள ஆர்வம் பாரட்டத்தக்கது. இசையும், நடனமும், நமது வாழ்வுக்கு புத்துணர்ச்சி அளித்து நம்மை ஊக்குவிக்கின்றன. இயற்கையும், கலாச்சாரமும் கோவாவில் இணைந்துள்ளது. இயற்கையான சுற்றுச்சூழலை கோவா மாநிலம் பாதுகாக்கிறது. அதனால் சுற்றுலாவின் சொர்க்கமாக கோவா திகழ்கிறது. நாட்டில் உள்ள இது போன்ற அழகான இடங்களை மக்கள் பார்வையிட வேண்டும். இது சுற்றுலாத்துறைக்கு ஊக்குவிப்பை அளிக்கும்.

இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு பேசினார்.

கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, முதல்வர் டாக்டர் பிரமோத் சவாந்த், மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*****


(Release ID: 1767675) Visitor Counter : 210