ரெயில்வே அமைச்சகம்
சென்னை-மைசூர்-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்புகள் சான்றளிக்கப்பட்ட தெற்கு ரயில்வேயின் முதல் ரயில், இந்திய ரயில்வேயின் முதல் சதாப்தி எனும் பெருமைகளை பெற்றுள்ளது
Posted On:
28 OCT 2021 4:15PM by PIB Chennai
ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்புகள் (ஐஎம்எஸ்) சான்றளிக்கப்பட்ட தெற்கு ரயில்வேயின் முதல் ரயில், இந்திய ரயில்வேயின் முதல் சதாப்தி மற்றும் இந்திய ரயில்வேயின் இரண்டாவது மெயில்/எக்ஸ்பிரஸ் எனும் பெருமைகளை சென்னை-மைசூர்-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.
ரயில் எண். 12007/12008, டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் சந்திப்பு - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், ஐஎஸ்ஓ 9001:2015, 14001:2015 மற்றும் 45001:2018 சான்றுகளை பெற்ற தெற்கு ரயில்வேயின் முதல் ரயில் எனும் பெருமையை பெற்றுள்ளது.
சென்னை கோட்டத்தின் பேசின் பிரிட்ஜ் பணிமனையால் பரமாரிக்கப்படும் இந்த ரயிலுக்கு, விரிவான தணிக்கை மற்றும் அனைத்து வகுக்கப்பட்ட விதிமுறைகளையும் பின்பற்றுவதை முறையாகச் சரிபார்த்த பிறகு, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரயில் சேவையை ஆய்வு செய்த தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் திரு ஜான் தாமஸ், ஐஎம்எஸ் சான்றிதழைப் பெற்ற பேசின் பிரிட்ஜ் பணிமனையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவைப் பாராட்டினார். ஐஎம்எஸ் சான்றிதழை பேசின் பிரிட்ஜ் பணிமனை அதிகாரியிடம் பொது மேலாளர் வழங்கினார். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் இந்த சேவை அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767202
(Release ID: 1767335)
Visitor Counter : 212