உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிரிஷி உடான் 2.0-வை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டார்

Posted On: 27 OCT 2021 6:35PM by PIB Chennai

கிரிஷி உடான் 2.0-வை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை செயலாளர் திருமதி உஷா பதி, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு ராஜ்பீர் சிங், இந்திய விமான நிலைய ஆணைய சரக்கு போக்குவரத்து மற்றும் துணைச் சேவைகள் நிறுவன தலைமை செயல் அதிகாரி திரு கேகு கஸ்தர் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைமைச் செயலாளர் திரு திலீப் செனாய் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

 

வேளாண் விளைபொருட்களின் மதிப்பை விமான போக்குவரத்து மூலம் மேம்படுத்தி வேளாண் மதிப்பு சங்கிலிக்கு பங்களிப்பதை கிரிஷி உடான் 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் விளைபொருட்கள் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுவதற்கு இது ஊக்கம் அளிக்கும்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, "கொள்கைகளை வகுப்பதில் அரசின் ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான உதாரணமாக

கிரிஷி உடான் 2.0 உள்ளது. விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புதிய கதவுகளை இது திறக்கும். பல்வேறு தடைகளை தகர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் லட்சியத்தை அடைய இது உதவும்," என்று கூறினார்.

 

விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம். விவசாயம் மற்றும் விமானம் ஆகிய இரண்டு துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம் இது நடைபெறும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

இந்திய விமான நிலைய ஆணையத்தின் 100% துணை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணைய சரக்கு போக்குவரத்து மற்றும் துணைச் சேவைகள் நிறுவனம் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதி அளித்தல் முகமையான இன்வெஸ்ட் இந்தியா ஆகியவற்றின் ஆதரவுடன் கிரிஷி உடான் 2.0 திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 53 விமான நிலையங்களில் இது செயல்படுத்தப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767005

***


(Release ID: 1767027) Visitor Counter : 329


Read this release in: English , Hindi