அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் புதுமைகளில் கல்வி மற்றும் தொழில் துறைகளை அத்தியாவசிய பங்குதாரர்களாக ஆக்குவதற்கான அமைப்பு ரீதியான செயல்முறை உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
27 OCT 2021 5:03PM by PIB Chennai
அறிவியல் புதுமைகளில் கல்வி மற்றும் தொழில் துறைகளை அத்தியாவசிய பங்குதாரர்களாக ஆக்குவதற்கான அமைப்பு ரீதியான செயல்முறை உருவாக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு (சிஎஸ்ஐஆர்) சங்கத்தின் கல்வி துணை குழுவிடம் உரையாடிய அவர், கல்வி மற்றும் தொழில் துறைகள் இடையே நிலவும் நம்பிக்கை குறைபாட்டை களைய வேண்டும் என்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு தேவையான நிதி உதாரணமாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சிஎஸ்ஐஆர் மற்றும் தொழில்துறை இடையே வலுவான பிணைப்புகளை உருவாக்குமாறு சிஎஸ்ஆர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள முக்கிய தொழில் நிறுவனங்களை தாம் சமீபத்தில் வலியுறுத்தியதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கல்வித் துறை, தொழில் துறை மற்றும் அரசு எவ்வாறு இணைந்து பணியாற்றி புதுமைகள் மற்றும் தொழில்முனைதலை நாட்டில் முன்னேற்றலாம் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்றுள்ள கல்வித் துறை வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அறிவு உருவாக்கம், கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளின் மூலம் நாட்டில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் தொழில்துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக்கு முக்கிய பங்குள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766936
***
(Release ID: 1767021)
Visitor Counter : 222