இந்திய போட்டிகள் ஆணையம்
எச்டிஎஃப்சி எர்கோ பொதுக் காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை எச்டிஎஃப்சி வங்கி வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல்
Posted On:
25 OCT 2021 6:27PM by PIB Chennai
எச்டிஎஃப்சி எர்கோ பொதுக் காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை எச்டிஎஃப்சி வங்கி வாங்குவதற்கு இந்திய போட்டியியல் சட்டம் 2002 31-வது பிரிவின் கீழ் இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
எச்டிஎஃப்சி எர்கோ பொதுக் காப்பீடு நிறுவனத்தின் 4.99 சதவீத பங்குகளை எச்டிஎஃப்சி நிறுவனம் வாங்குகிறது. பங்குகளை வாங்கும் எச்டிஎஃப்சி நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியுடன் பதிவு செய்துள்ள நிறுவனமாகும். இது பலவிதமான வங்கிச் சேவைகளை வழங்குகிறது.
இந்தியாவில் பொது மற்றும் ஆயுள் அல்லா காப்பீடு திட்டங்களில் எச்டிஎஃப்சி நிறுவனமும், எர்கோ இண்டர்நேஷனல் ஏ ஜி நிறுவனமும் இணைந்து செயல்படுவதே இதன் நோக்கமாகும்.
***
(Release ID: 1766407)
Visitor Counter : 218