நிதி அமைச்சகம்

அரசு பங்குகளின் ஏல விற்பனை பற்றிய அறிவிப்பு

Posted On: 25 OCT 2021 5:25PM by PIB Chennai

அரசு பங்குகளை ஏல நடவடிக்கையின் மூலம் விற்பது குறித்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

'இந்திய அரசின் மிதவை விகித பத்திரம், 2028' ரூ 4,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

'6.10 சதவீத அரசு பங்கு, 2031' ரூ 13,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

‘6.67 சதவீத அரசு பங்கு, 2061' ரூ 7,000 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் 2021 அக்டோபர் 29 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த ஏலங்கள் நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766323(Release ID: 1766381) Visitor Counter : 197


Read this release in: Punjabi , English , Urdu , Hindi