சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் சுற்றுலாத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி

Posted On: 22 OCT 2021 6:12PM by PIB Chennai

சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் தெலங்கானாவில் பல சுற்றுலாத் திட்டங்களை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.

சுற்றுலாத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தெலங்கானாவில் முளுகு மற்றும் வாரங்கல் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி இன்று சென்றார்.

முளுகு- லக்னாவரம் - மேதவரம் - தத்வாய்  - தமராவி மல்லூர் பொகாதா  நீர் வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.75.88  கோடி ஒதுக்கியது.  இதையடுத்து இப்பகுதியில் பல வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பாளம்பேட் செல்லும் வழியில் உள்ள கதம்மா என்ற இடத்தில் ஹரிதா என்ற உணவு விடுதியை திரு கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் முளுகுவில் சாலையோர வசதிகளையும், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் எனவும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.  முளுகு என்ற இடத்தில் உள்ள ருத்ரேஸ்வரா (ராமப்பா) கோவிலில் உலக பாரம்பரிய சின்ன அறிவிப்புப் பலகையை மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி திறந்து வைத்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765811

*****************


(Release ID: 1765838) Visitor Counter : 189
Read this release in: English , Urdu , Hindi