தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நியூஸ் ஆன் ஏர் வானொலி தரவரிசை: முன்னணியில் சென்னை மற்றும் கொடைக்கானல் வானொலி நிலையங்கள்
प्रविष्टि तिथि:
22 OCT 2021 1:09PM by PIB Chennai
நியூஸ் ஆன் ஏர் செயலி மூலம் அகில இந்திய வானொலியின் பல்வேறு நிலையங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை கேட்பவர்களின் எண்ணிக்கையை பிரசார் பாரதியின் நேயர்கள் ஆராய்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.
புனே, பெங்களூரு மற்றும் இந்தோரில் நிகழ்ச்சிகளைக் கேட்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், பாட்னா மற்றும் லக்னோவில் 10 லட்சத்திற்குச் சற்றே குறைவாக நேயர்கள் உள்ளனர்.
மாதாந்திர நேயர்கள் எண்ணிக்கையில் அனைத்திந்திய அளவில் 10-ம் இடம் பிடித்துள்ள சென்னை நிலையத்தின் நிகழ்ச்சிகள் 475.8 ஆயிரம் பேரால் கேட்கப்படுகின்றன.
நியூஸ் ஆன் ஏர் அதிகம் பயன்படுத்தப்படும் நகரங்களின் பட்டியலில் சென்னை ஆறாம் இடம் பிடித்துள்ளது. புனே, பெங்களூரு, மும்பை, தில்லி என்சிஆர், ஹைதராபாத், கொல்கதா, எர்ணாகுளம், அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் இதர முன்னணி நகரங்களாகும்.
நியூஸ் ஆன் ஏர் செயலில் செய்யப்படும் நேரலைகளை பொருத்தவரை, அகில இந்திய வானொலி கொடைக்கானல் எட்டாம் இடம் பிடித்துள்ளது.
சென்னையில் உள்ள நேயர்கள் நியூஸ் ஆன் ஏர் செயலி மூலம் அகில இந்திய வானொலி கொடைக்கானல், விவித் பாரதி நேஷ்னல், அகில இந்திய வானொலி திருச்சிராப்பள்ளி எஃப் எம், அகில இந்திய வானொலி சென்னை ரெயின்போ எஃப் எம், அகில இந்திய வானொலி கோயம்புத்தூர் எஃப் எம் ரெயின்போ, அகில இந்திய வானொலி சென்னை விபிஎஸ், அகில இந்திய வானொலி தமிழ், அகில இந்திய வானொலி சென்னை பிசி, அகில இந்திய வானொலி புதுச்சேரி ரெயின்போ மற்றும் அகில இந்திய வானொலி காரைக்கால் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளை அதிகளவில் கேட்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765695
*****
(Release ID: 1765695)
(रिलीज़ आईडी: 1765757)
आगंतुक पटल : 250