உள்துறை அமைச்சகம்
காவலர் வீர வணக்க நாள்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மரியாதை
Posted On:
21 OCT 2021 5:42PM by PIB Chennai
காவலர் வீர வணக்க நாளில், நாட்டின் இறையாண்மையைக் காக்க, தங்கள் உயிரைத் தியாகம் செய்த காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
இது குறித்து சுட்டுரையில் திரு அமித்ஷா கூறுகையில்,
‘‘தைரியம், கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியின் மிகச்சிறந்த உதாரணம் காவல்துறை. காவலர் வீர வணக்க நாளில், நாட்டின் இறையாண்மையைக் காக்க உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு நாட்டின் சார்பில், தலை வணங்குகிறேன். ஒவ்வொரு காவலரின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு நம்மை ஊக்குவிக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
புதுதில்லியில் உள்ள தேசியக் காவலர் நினைவிடத்தில், உயர்நீத்த போலீசாருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு நித்யானந்த ராய் மற்றும் அஜய் மிஸ்ரா ஆகியோர் மரியாதை செலுத்தினர். ‘‘இந்த தினத்தில், பணியின் போது உயிர் நீத்த போலீசாரின் தியாகங்களை நாம் நினைவு கூர்கிறோம்’’ என திரு நித்யானந்த ராய் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765523
******
(Release ID: 1765567)
Visitor Counter : 294