புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
நான்காவது சர்வதேச சூரிய சக்தி கூட்டணி பொதுக்குழு கூட்டத்தின் முன்னோட்டம்
प्रविष्टि तिथि:
18 OCT 2021 3:39PM by PIB Chennai
2021 அக்டோபர் 18 முதல் 21 வரை காணொலி வாயிலாக நடைபெற உள்ள நான்காவது சர்வதேச சூரிய சக்தி கூட்டணி பொதுக்குழு கூட்டத்திற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் தலைமை வகிக்க உள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஒரே சூரியன், ஒரே உலகம் ஒரே தொகுப்பு' முன்முயற்சி மற்றும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் சூரியசக்தி முதலீடுகள் குறித்து இந்த வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கலப்பு நிதி ஆபத்து எதிர்கொள்ளும் வசதிக்கான ஒப்புதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் அடுத்த ஐந்து வருடங்களுக்கான செயல் திட்டம் குறித்தும் உறுப்பு நாடுகளின் சர்வதேச தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், உலக வங்கி மற்றும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி 'ஒரே சூரியன், ஒரே உலகம் ஒரே தொகுப்பு' குறித்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலையில், உலகின் மிக முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நடவடிக்கையாக இது இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764673
-----
(रिलीज़ आईडी: 1764723)
आगंतुक पटल : 407